பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- = கவியரசர் முடியரசன் ஆனால், செய்ந்நன்றியை மறந்த ஒருவன், அக் குற்றத்திலிருந்து தப்புவதற்குக் கழுவாயே யில்லை. நன்றி மறந்த குற்றம், கொலைக் குற்றத்திற்குச் சமமானது. ஆதலின் அதற்கு உய்வே யில்லை. எத்தகைய சூழ்நிலையிலும் செய்ந்நன்றி மறந்துவிடுதல் தகாத செயலாகும். சூழ்நிலைகளுக்கும் தன்னலத்திற்கும் இடங்கொடாது, செய்ந்நன்றியறியும் வல்லானை இவ்வுலகம் என்றும் ஏத்திப் புகழும். இதற்குக் கன்னன் ஒருவனே சிறந்த சான்றாக அமைவான். குந்தி தன்னைப் பெற்றெடுத்த அன்னையென்பதையும், பாண்டவர் தன் உடன்பிறந்தோர் என்பதையும் அவள் வாயிலாகக் கன்னன் அறிகிறான்; பாண்டவருடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறு கன்னனிடம் குந்தி மன்றாடுகிறாள்; வந்தால் ஆட்சிப் பொறுப்பு அவனிடம் ஒப்புவிக்கப்படும் என்றுங் கூறுகிறாள். ஆனால், கன்னன் அதற்கு ஆசைப்படவில்லை; உடன் பிறந்தவரையும் எண்ணிப் பார்க்கவில்லை. ஆற்றில் மிதந்து வந்த தன்னை - தேர்ப்பாகனால் வளர்க்கப்பட்ட தன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டு, ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பையுங் கொடுத்துள்ள துரியோதனனை விட்டுப் பிரிய உடன்படவில்லை; இவ்வளவு காலம் தனக்குச் சோறிட்டு, உயரிய நிலைக்கு ஆளாக்கிய துரியோதனனை, போர் தொடங்கிவிட்ட இவ்வேளையில் தனிய விட்டுவிட்டுப் பாண்டவருடன் சேர்ந்து கொள்ள ஒப்பவில்லை. 'செஞ் சோற்றுக் கடன் கழிப்பதுதான் எனக்குத் தருமமுங் கருமமும் ஆகும்’ என விடையிறுத்தான். கன்னன் தனக்கு ஒப்புயர்வற்ற