பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- → அன்புள்ள பாண்டியனுக்கு... இத்தகு சிறப்பு வாய்ந்த சொல்வன்மைக்கு ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேராற்றல் உண்டு. அதனால் பேசும் பொழுது சொல்லின்கட் சோர்வு நேராவண்ணம் காத்துக் கொள்ள வேண்டும். சோர்வு என்றால், சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாது மறந்து விடுதலாம். அம்மறதியால் பேரழிவு நேர்ந்து விடுதலுங் கூடும். அரசியல் நடத்துவோர்க்கென இவ்வாறு கூறப்பட்டிருப்பினும், தனி மனிதனுக்கும் இது பொருந்தி வருவதேயாகும். சொல்ல வேண்டிய ஒன்றை மறதியாற் சொல்லாது விடும் ஒருவன் சிற்சில வேளைகளிற் பெருங்கேட்டுக்கு ஆளாகி விடுவதும் உண்டு. அதனால் அச்சோர்வு வாராது தடுத்துக் காத்துக் கொள்ள வேண்டும். பேச்சு, எவ்வாறிருக்க வேண்டும் ? எத்தகையதாய் இருக்க வேண்டும் ? என நமக்கு நாமே வினவிக்கொண்டு, ஆராய்ந்து பேச வேண்டும். அவ்வாறு பேசும் பேச்சு. நட்பாயுள்ளவர்களை அவர் வேறுபட்டுச் செல்லா வண்ணம் மீண்டும் பிணிக்கத்தக் கதாய் விளங்க வேண்டும்: பகையாயுள்ளவர்கள் பகையொழிந்து நட்புக் கொள்ள த் தக்கதாய் இருக்க வேண்டும்; பல நூல்களைக் கேட்டறிற் தவர்களையும் ஈர்க்கத் தக்கதாய் அமைய வேண்டும்; நூல் கேளாதாரும் விழையத் தக்கதாய் அமைய வேண்டும்; தன் பேச்சை முன்பு கேட்டவர்களையும் இதற்கு முன் கேளாத வரையும் தன்வயப்படுத்தத்தக்கதாய் இருக்க வேண்டும்.