பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C T அன்புள்ள பாண்டிய அக்கு.) பேச்சாளர் என்ற நிலை யைப் பெற்றார். ஏன் இவர் வரலாற்றை எழுதினேன் என்றால், தளரா உழைப்பிருந்தால் எத்துறையிலும் வெற்றி பெற்றுயரலாம் என்பதை எடுத்துக் காட்டத்தான். இத்தகைய பெருமக்கள் வாழ்க்கை வரலாறு களையெல்லாம் படிக்கும்பொழுது, ஒவ்வொரு செயலையும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். எவ்வெவற்றைக் கொள்ளலாம், எவ்வெவ்வாறு மேற்கொள்ளலாம் என்றெண்ணிப் பார்த்து முன்னேற முயலுதல் வேண்டும். இவ்வாறு நீயும் முயன்று நாநலம் மிக்இவன-கவும், அதனை நானிலம் போற்றவும், அந் நாநலம் நாட்டின் உயர்வுக்கும் மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படவும், நம் பண்பாட்டைக் காக்கவும் பெருந்துணையாகுமாறு நின்று வாழ்க என வாழ்த்துகிறேன். "கேட்டார்ப் பிணிக்குந் தகைய வாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்”. இங்ங்னம், அறிவுடை நம்பி.