பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(22 - -T இன்புள்ள இளவரசனுக்கு o - - - - பணிந்து நடக்க வேண்டுமென்று எண்ணித் தாழ்வு மனப்பான்மையுடையவனாக - அடிமையுள்ளமுடையவனாகப் பழகி விடாதே. பணிவு வேறு, தாழ்வு மனம் வேறு, பெருமிதவுனர் வுடையவனாக இரு. பெருமிதமாக இருக்க வேண்டுமென்று செருக்குடையவனாக மாறி விடாதே. பெருமிதம் வேறு, செருக்கு வேறு, இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து நட, இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து நட, ஒவ்வொன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை உணராமல் நிரம்பப்பேர் கெட்டுவிட்டார்கள். அந்தக் கேட்டுக்கு நீயும் இடங்கொடுத்து விடாதே. சரி, கடிதம் நீண்டு விட்டதென்று எண்ணுகிறேன். ஒவ்வொன்றாகச் சொன்னால்தானே நீயும் கடைப்பிடித்து ஒழுக முடியும். ஆகவே நிறுத்துகிறேன். உன் தந்தை 11.7.1956 முடியரசன்.