பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... பெற்றிருக்கிறது அது. அது போலவே மானத்தை மதிக்கும் மாண்புடைய சான்றோர், மானங் கெடத்தக்க சூழ்நிலை வருமானால் உயிரை விட்டொழிப்பரேயன்றி, மானத்தை விட்டுவிடச் சம்மதியார். உயிர் என்றேனும் ஒரு நாள் நீங்குந் தன்மை வாய்ந்தது. மானம் எக்காலத்தும் நிலைத்து நிற்க வல்லது. அதனால் நிலையில்லாத உயிரை விட்டு, நிலையான மானத்தைக் காப்பர். அவர்களுக்கு மானம் அவ்வளவு பெரியது; உயிர் அவ்வளவு சிறியது. தமக்கோர் இழிவு வந்தவிடத்து, அதனைப் பொறுத்துக் கொண்டுயிர் வாழ மாட்டாது, அவ்வுயிரை விட்டு, மானத்தைக் காத்து நிற்கும் மாந்தருடைய புகழ் வடிவை, இவ்வுலகமானது எக்காலத்துந் தொழுது போற்றும். 'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” இங்ங்னம், அறிவுடை நம்பி.