பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் புலமை, காற்பங்குதான் உண்டாகும்; மற்றைய மாணவருடன் பழகுவதால் மற்றொரு காற்பங்கு புலமை பெறுகிறோம். நம் முன்னோர் நன்குணர்ந்தே இம்முறையைக் கூறியுள்ளனர். ஆதலின் உன் கல்விக்கு உறுதுணையாக வாய்க்கும் நண்பரைப் பற்றிக்கொண்டு பழகு. வெறும் பேச்சுக்குப் பழகு வோரிடமிருந்து மெல்ல மெல்ல விலகி விடு. பயனில் சொற் பாராட்டுவோர் தொடர்பு வேண்டா. விரும்பிப் போற்றும் கொள்கை உனக்கென்று ஒன்றிருக்குமானால் அதை எல்லாரிடமும் வெளிக்காட்டுதல் கூடாது. படிப்பு முடியும் வரை மனத்துள் மறைத்து வைப்பதுதான் நல்லது. மற்றொன்று, மிக மிக இன்றியமையாதது. ஆசிரியர் களிடம் பழகும் போதும் முன்னெச்சரிக்கையாகப் பழகு. எல்லா ஆசிரியரிடமும் விரும்பிப்பழகு. அனைவரையும் மதித்துப் போற்று. இருப்பினும் ஆசிரியருள் ஒரிருவரைத்தான் உள்ளன்புடன் விரும்ப முடியும். அதுதான் இயல்பும் கூட. அவ்வாறு உன் உள்ளம் விழையுமானால், அவ்விழைவு ஏனைய ஆசிரியர்களுக்குத் தெரிதல் கூடாது. ஏனெனில் நான் கேள்விப் பட்ட அளவில் ஆசிரியர்களிடையே ஒற்றுமை இல்லையாம். ஒவ்வொருவரும் தாம்தாம் பேராசிரியர் என எண்ணித் திரிகின்றனராம். அவ்வாறு எண்ணிக் கொள்வதில் குற்றமொன்றில்லை. மற்றவரைத் தாழ்த்தியும் புறங்கூறியும் வருகின்றனராம். கேடு பயக்கும் வழிகள் என்னென்ன உள்ளனவோ அவற்றையெல்லாம் கையாள்கின்றனராம். தமக்கு வேண்டிய மாணவர், அவர்க்கு