பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிiரசர் முடியரசன் - - TT. 33} வள்ளுவர் கல்வி பயில்வோர்க்கு அரியதொரு கருத்தை அறிவுறுத்துகிறார். அதனை இப்பொழுது உனக்குச் சொல்வது நல்லது. ங் “உடையார் முன் இல்லார்போல் எக்கற்றுகற்றார் + கடையர்ே கல்லா தவர்”. என்பது அவர் வாய்மொழி. அதன் பொருளையும் எழுதி விடுகிறேன். சிறிது பொறுமையுடன் படி, இதையும் "போர்” என்று சொல்லி விடாதே. முன் முதனில் இல்லார் போல் - வறியவரைப் போல; ஏக்கற்றும் கற்றார் - தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவர்கள்; உடையார் - பின்பு எல்லாம் உடையவராகக் கருதப்படுவர் கல்லாதவர் அவ்வாறு கல்லாதவர்; கடையரே - ஒரு பொருட்டாகக் கருதப்படாமல் கீழாகக் கருதப்படுவர். அஃதாவது முதலில் வறியவர் போல ஆசிரியரிடம் தாழ்ந்தும் கீழ்ப்படிந்தும் பாடம் கேட்பவர், பின்னர் எல்லாம் உடைய பெரியோராகக் கருதப்படுவர். கீழ்ப் படியக் கூசுவோர் கடையராவர் என்பதாகும். இது பரிமேலழகர் பொருளன்று, நான் சிறிது மாற்றிப் பொருள் கொண்டேன். இதனை உனக்கு வழங்குகிறேன். இதன்படி நடந்து நன்மை பெறு. இரண்டொரு நாளில் குற்றாலஞ் செல்லுவேன். சென்று வந்து விளக்கமாக இன்னும் எழுதுவேன். உன் தந்தை 15.8.1956 முடியரசன்