பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t கவியரசர் முடியரசன் கொண்டு அதன் படி நடந்து கொள்ள வேண்டும். நீ நடப்பதோடன்றி நின் மாணவத் தோழர்களையும் அவ்வாறே நடக்குமாறு சொல்லுதல் வேண்டும். யான் எழுதும் வண்ணம் நடந்து கொண்டால் எவ்வகை ஊறுமின்றி நலமே திரும்பல்ாம். ஆதலின் முன்னறிவிப்புடன் நடந்து கொள்க. மேலும் அம்மலை பற்றிச் சிறிது விளக்கம் தருகிறேன். அவ் விளக்கம் வழிகாட்டி போல உதவும். குற்றால மலை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இப்பகுதியைத் திரிகூட மலை, பொதியமலை என்றெல்லாம் வேறு பெயராலும் அழைப்பர். இரண்டு மூன்று மலைத் தொடர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து கிடக்கும். ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்கள், முகில் மூடிய மலையுச்சி, அருவியின் ஆரவாரம், சோலைகளிற் புகுந்து சலசலப்பை உண்டாக்கிவரும் பூங்காற்றின் இறைச்சல், புள்ளினங்கள் எழுப்பும் பல்வகை ஒலி, அருவியில் நீராடுவார்தம் ஆர்ப்பரிப்பு இவை எல்லாம் இன்பமயம். அம் மலைக் காட்சி, காண்பாரை அப்படியே மலைத்து நிற்கச் செய்யும் இயல்பினது. நாங்கள் தங்கியிருந்த இடம் கண்ணாடி மனை (GLASS BUNGALOW) எனப்படும். இப்பொழுது கண்ணாடி காணமுடியாது. அது, முன்பு கண்ணாடிகள் அமைத்துச் செய்யப்பட்டிருந்ததாம். இப்பொழுது அது கற்சுவர் வீடாகத்தான் காட்சியளிக்கிறது. இருப்பினும் பழைய பெயர்தான். முன்றிலில் ஒரு சிறிய பூங்கா, சண்பகம், சந்தனம், தென்னை, கமுகு முதலிய பல்வகை மரங்களில் வகைக் கொன்று அங்கே உண்டு. பல்வகை மலர்ச்