பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ರಾD —प्तः அடுத்தபடி, கீழே பெண்கள் நீராடுவதற்காகக் கட்டப் பட்டிருக்கும் இடம் உண்டு. அதனருகில் கூழாங்கற்கள் பெரியனவும் சிறியனவுங் கொண்டு, மாடங்களை மைந்த சுவரொன்று எழுப்பப் பெற்றிருக்கும். அச்சுவர் கண்ணுக் கினிய காட்சியாகும். சிறிது தள்ளி நின்று பார்ப்பார்க்குப் பெரிய பெரிய முத்துகள் பதித்துச் செய்யப்பட்ட சுவரெனத் தோன்றும். இவ் வருவியில் நீராடி வழிபாடு செய்ய விழைவார்க்கு ஆண்டுச் சிறிய அழகிய கோவில் ஒன்றும் கட்டப்பட்டிருக்கும். சுருங்கக் கூறின் இப் புலியருவி செயற்கை அழகாற் பொலியும். இனி, குற்றாலத்துள் நுழையின் நம் எதிரில் தோன்றுவது பேரருவியே. இஃது ஆண்டுள அருவிகளிற் பெரிதாயிருப்பது பற்றி இப்பெயர் பெற்றது. இவ்வருவி நம்மை எதிர் கொண்டு வர வேற்பது போல, உயரிய இடத்தினின்றும் அகன்று விரிந்து பரவிச் 'சோ' என்ற பேரொலியோடு வீழும். மலையுச்சியிலிருந்து ஓடிவந்து உயர்ந்த ஒரு சரிவில் கீழே இறங்குகிறது. அஃது ஒரு பனை உயரத்திலிருந்து, கீழே உள்ள பெரிய ஆழமான சுனையொன்றில் தடதட வென வீழ்கிறது. அது வீழும் இடத்தைப் பொங்குமாங்கடல் எனப் புகல்கின்றனர். அங்கிருந்து வழிந்து அகலமான பாறையிற் பரவி வீழ்கிறது. வீழும் இவ்விடந்தான் நீராடற்கேற்ற வகையில் காப்பமைவுகளுடன் நன்கு கட்டப்பட்டிருக்கிறது. அருவியில் நின்று நீராடுவோர்க்குப் பற்றுக் கோடாக வலிய நீண்ட இரும்புக் கம்பிகள் அமைத்து மூன்று வரிசைகள் கட்டப் பட்டிங்க்கின்ான