பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -அன்புள்ள இளவரசனுக்கு ெ நீயும் நின்னுடன் வருவோரும் இக் கம்பிகளைப் பற்றி நின்றே நீராடல் வேண்டும். இது நல்ல பாதுகாப்பான இடந்தான். இருப்பினும் தவறி விழுந்து விடின் ஏதும் விளையாதிருத்தற் பொருட்டு, நீண்ட வளைவுச் சுவரொன்று எழுப்பப் பெற்றிருக்கிறது. இச் சுவநிக்கும் மலைக்கும் இடையேதான் அருவி வீழும். அதனால் ஏதும் ஒன்றும் நிகழ்ந்து விடாது. இருப்பினும் மக்கள் ஒழுங்கு முறை தவறுவதால் அஃதாவது வரையறை மீறுவதால் ஏ தத்துக்கு ஆளாகின்றனர். கம்பி மீது ஏறி நின்றும் வளைவுச் சுவர் மீது ஏறிநின்றும் நீராடும் குறும்பர் சிலர். அருவியின் வேகத்தால் அல்லலுக்கு ஆளாகின்றனர். வரையறையை மீறுவதால் நேரும் விளைவு. நாம் எச்சரிக்கையாக இருந்தால் துன்பமே இல்லுை, நான் குற்றாலத்தில் முதன் முதற்கண்டபேரருவியே யாகும். முதலில் அங்கு நீராட அஞ்சினேன். பார்க்கும் போதே அச்சம். அருகில் சென்றதும் அதன் பேரோசை அச்சத்தை இன்னும் பெருக்கியது. உடன் வந்தோர் என் அச்சங்கண்டு, எள்ளி நகைத்தனர். எனினும் நீராட மறுத்து விட்டேன். என்னிடம் பரிவு கொண்ட அவர்கள் மற்றோ ரருவிக்கு அழைத்துச் சென்றனர். பேரருவியிலிருந்து சிறிது தொலைவு மேற்கே சென்று, இடப்பக்கம் திரும்பி, மேலேறிச் சென்றால் அங்கே ஒரருவி காணப்படும். அதனைச் சிற்றருவி யென்பர். பெயர்தான் சிறிது. வீழும் வேகமோ பெரிது. அங்கும் அச்சந்தான், இருப்பினும் துணிந்து நீராட முற்பட்டேன். இவ்வருவியில்