பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அன்புள்ள இளவரசனுக்கு என்று முடியரசன் எனும் பெயரில் எழுதப்பட்ட கடிதங்கள் ஒரு பகுதியாகவும் அன்புள்ள பாண்டியனுக்கு என்று அறிவுடைநம்பி எனும் பெயரில் எழுதப்பட்ட கடிதங்கள் ஒரு பகுதியாகவும் இந்நூலுள் வருகிறது. மைந்தனுக்குத் தந்தை எழுதுவது போலக் கடித வடிவில், என் தந்தையாரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை பல்லாண்டுகளுக்கு முன்னர், கவிஞரால் எழுதப்பட்டவையாகும். அவை இளைஞர்களுக்குப் பயன்படும் என்று கருதித் தொகுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அறிவுரை தருவனவும், இலக்கியம் பற்றியனவும், இயற்கையெழில் பற்றியனவும், கடவுளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றியனவும், தமிழர் போக்கினை எண்ணிப் புலம்புவனவும், கவிதை பற்றியனவும் மற்றும் மக்களிடையே அருகி வரும் பண்பாட்டுணர்ச்சியை மீண்டும் தலையெடுத்து வளரச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்நூல் உருவாக்கப்பட்டது. அவ்வுணர்ச்சியை, இளைஞர் உள்ளங்களில் விதைப்பது சாலப் பயன் தரும் எனக் கருதியே அவர்கட்கேற்பத்