பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

āīgā` --- as) அனைவரும் எம் முடிவுக்கு வருகின்றனரோ அதன் படி நடந்து கொள். இவ்வருவி அய்ந்து பிரிவாகப் பிரிந்து வீழ்வதால் இப் பெயர் பெறுகிறது. இங்கும் நீராடற் கேற்ற காப்பமைவுகள் உண்டு. - பேரருவியின் மேற்பகுதியில், சண்பகாதேவி என்றோர் அருவியுண்டு, சிற்றருவியிலிருந்து மேலே ஏறிச் செல்ல வேண்டும். வளைந்து வளைந்து செல்கின்ற மலை வழியில் மூச்சுத் திணற ஏறிச் சென்றேன். வழி முழுதும் வானுயர் மரங்கள். தேக்கு, சந்தனம், சாதிக்காய் முதலான பல்வகை மரங்கள் அடர்ந்த காடுகள், கற்பாறைகள், ஒற்றையடிப் பாதை இவற்றை யெல்லாங் கடந்து, மலை மேல் ஏறிச் சென்றால் சண்பகா தேவியை அடையலாம். இதுவும் பெரிய அருவியே. ஆனால் நீராடற் கேற்ற அமைப்புகள் இல்லை. முன்பு அமைத்திருக்கிறார்கள். அருவியின் விசையால் அவ்வமைப்புகள் சிதறுண்டு காணப்படுகின்றன. ஆதலின் நீராட இயலாது. அருகில் சிறு கோவிலும் அம்மன் சிலையும் காணப்படுகின்றன. சண்பகா தேவி என்ற அம்மன் அருகில் இருப்பதால் இவ்வருவி சண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றதோ என்று அய்யுற்றேன். ஆனால் சிறிது நேரத்தில் அய்யம் நீங்கப் பெற்றேன். அவ்விடம் சண்பக மரங்கள் நிறைந்த காடாக முன்பு இருந்திருக்கிறது. அதனால் அவ்விடத்தைச் சண்பக அடவி யென்றழைத்தனர். அடவி என்னுஞ் சொல்லுக்குக் காடு என்னும் பொருளுண்டு. சண்பக அடவி நாளாக நாளாகச் சண்பகாடவி என்றாகிப் பின்னர்ச் சண்பகா தேவியாக மருவிவிட்டது. கடவுளைப் படைப்பதில் நம் மக்கள்