பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள்ள் இளவரசனுக்கு ...! வல்லவரகளல்லவா தேவியும் தோன்றிவிட்டாள். உண்மைப் பெயர் சண்பக அடவி என்பதுதான். இங்கே வீழும் அருவி சண்பக அடவி அருவி என்று பெயர் பெற்று மக்கள் பக்திப் பெருக்கால் சண்பகா தேவி அருவியாக மாறிவிட்டது. இந்த அருவியிலிருந்து இன்னும் மேலேறிச் செல்வோர் தேனருவியை அடைவர். இங்குச் செல்வதுதான் அரிதாகும். எல்லாரும் எளிதிற் செல்ல இயலாது. வெயில் நுழைபறியாக் காட்டுவழி. அவ்வழியும் ஒருவர்பின் ஒருவராகச் செல்லுமாறு அமைந்தது. சிறிது தவறினால் சரிஷ்களில் எங்காவது முட்புதர்களிலே சென்றுதான் தங்கமுடியும். தங்கினால் நாம் மீண்டும் இவ்வுலகைக் காண இயலாது. - பெரும் பெரும் பாறைகளையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டும். தாண்டும் பொழுது சிறிது வழு க்கினால் அருவியில் வீழ்ந்து, எலும்புகள் ஒடிந்து சிதறி விடுவோம். மிகவும் உன்னிப்பாகச் செல்லுதல் வேண்டும். நாங்கள் ஒருவர் பின் ஒருவராகத் தாண்டிச் சென்றோம். நடந்து செல்ல இயலாது. தாண்டித் தாண்டித்தான் செல்ல இயலும். ஒவ்வொரு பாறையிலும் தாவிக் கொண்டிருக்கும் பொழுது, சரிவுகளின் மரக்கிளை களில் குரங்கினங்களும் தாவித் தாவிச் செல்லும் காட்சி யையும் கண்டோம். இரு திறத்தாருக்குத் தாவுதல் போட்டி நடப்பது போல் இருந்தது. வெற்றி நம் முன்னோருக்குத்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் நான் தாண்டிக் கொண்டிருந்தேன். இடையில் தங்கி விடலா மென்றால் ஒரே காடு. கொடிய விலங்குகள் வருமோ