பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 58 T T១៨េ இளவரசனுக்கு --- S S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS வழுவின்றி எழுத வேண்டும் - சொல்ல வேண்டுமென்று அடிக்கடி உன்னிடம் நான் கூறியிருக்கின்றேன். வழுவுடன் பேசுவதால் எழுதுவதால் எவ்வளவு பெரிய கேடுகள் விளைந்து விடும் என்று கூறியிருக்கிறேன். நான் பம்புளி என்ற இதன் பெயரைக் கேட்டவுடன் இது நம் பகுதியன்று போலும் எனக் கருதி விட்டேன். பெயர் எனக்குப் பெருவிந்தையாகவும் இருந்தது. பதற்றம் என்ற சொல்லைப் பதவிடம் என்றும் வேட்டி என்னும் சொல்லை 'வேஷ்டி என்றும் சொல்வதால் இச் சொற்கள் நம்முடையனவல்ல என்று நம் அறியாமையாற் கருதி வந்தது போலவே இந்தப் பம்புளியும் நம்முடையதன்று என்று கருதி விட்டேன். நம் ஊருக்கு வந்த பிறகு தான் அது நமக்குரியது என்றும், அழகிய தமிழ்ப் பெயர் தான் அவ்வாறு மருவி மயக்கத்தைச் செய்துவிட்டது என்றும் அறிந்தேன். அவ்விளக்கம், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப் பிள்ளை யவர்களாற் பெற்றேன். பசிய சோலைகள் நிரம்பிய இட மாத லின் பைம் பொழில் என்று நல்ல பெயரிட்டுள்ளனர் நற்றமிழர். வழித்தோன்றல்களாகிய நாம் அதனைச் சிதைத்துச் சீரழித்து பம்புளியாக்கி விட்டோம். நல்ல வேளை பம்புளி என்பது தமிழ்ப் பெயராக இல்லை; அதனால் இது தமிழர்களுக்கு உரியதன்று என்று சட்டமாக்கிப் பிறருக்குத் தாரை வார்க்காமல் போனோமே ! இதனாற்றான் தமிழ்ப் பெயர்களை மாற்றிப் பிற பெயர்களால் அழைப்பதும் சிதைத்து வழங்குவதுங்