பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முடியரசன்- 59 | கூடாதென்று பன்முறை கூறி வந்துள்ளேன். சொற்களைச் சிதைத்து வழங்குவதால் பெருந்தீங்குகள் நேர்ந்து விடும் தம்பி. நாம் விழிப்பாக இருக்க வேண்டும். சரி; நான் எழுதியவற்றை யெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு, நன் முறையில் நடந்து, நான் குறிப்பிட்டுள்ள இடங்களையெல்லாம் கண்டுகளித்து இன்பத்துடன் திரும்புக. நீ அங்குச் செல்லும் பொழுது, புலியருவிப் பெயர்க் காரணத்தை அங்கு எவரேனும் கூறக் கேட்டால் ஊர்திரும்பியதும் எனக் கெழுது. * இக் குற்றாலத்தைக் கண்டு வந்ததிலிருந்து எனக்கு ஒரு பெரு மகிழ்ச்சியும் உண்டு. என்று இமுள தென்றமிழுக்கும் அத் தமிழ் போலவே இன்பஞ் செய்யும் தென்றலுக்கும் தாயகம் என்று புகழப்படும் பெருமையும், பிற மலையிடங்களிற் காணப்பெறா அருவிப் பெருமையும், வளமும் நலமுங் கொண்ட இக் குற்றாலமும் நல்ல வேளையாக, நம்மைப் புறக்கணித்து விட்டு, வேறு பிறரைச் சென்று சரண் புகாது நம்மிடமே இருந்து வருகிறதென்ற பெரு மகிழ்ச்சிதான் அது. அந்தப் பெருமிதத்துடன் ஊருக்கு வந்து சேர்ந்தேன். நீ குற்றாலம் சென்று மீண்டதும் விவரமாக எழுது. உன் கடிதம் கண்டு வேறு செய்திகள் எழுதுவேன். உன் தந்தை 12.09.1956 முடியரசன்