பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறுத்தது ே -- o o | ---------- : o:


o: - - - - "lo o : ...o.

--- ... ooo-oo:


|--|--|- LI П. து ம o loo

-- ੁ - -o-o-o-o: o - o :سیر ت F. o --- -- - அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். யாரோ ஒருவர் தமிழைப் பற்றி இழிவாக ஒரிதழில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு வருந்தி எழுதியிருந்தாய். வருந்தி யாது பலன் ? பெரும் பான்மையான இதழ்கள் அவ்வாறுதானே எழுதுகின்றன. எழுத்தாளர்களும் மொழியைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கிப் படித்து மகிழ்கின்ற நிலை யையும் காண் கின்றோ மே 1 எ ன் செய்வது ? அந்த அளவிற்குத் தமிழ்மாந்தர் உணர்வற்றுக் கிடக்கின்றனரே ! தமிழ்நாட்டில் தமிழ்மக்களே தமிழ்த் தாளிகைகளில் தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் தமிழால் எழுது கின்றனர். அவற்றுட் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டு கின்றேன். உன் நண்பர்களிடம் அவற்றை எடுத்துக் கூறி, அவர்களுக்கும் உணர்ச்சி யூட்டு. தமிழகம் விழிக்குமா என்று பார்ப்போம். - *