பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன்- - - 31) நாளிதழ், கிழமையிதழ், திங்களிதழ் என்று எத்தனையோ இதழ்கள் தமிழ்மொழியில் நடைபெற்று வருகின்றன. தமிழர்களால் வெளியிடப்படுபவை அவை. தமிழ்மக்கள் அவற்றிற்கெல்லாம் ஆர்வத்துடன் வரவேற்பும் நல்குகின்றனர். தமிழர்க்காகத் தமிழ் மொழியிலே வெளிவரும் அவ்விதழ்கள் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழினம் இவற்றிற்கு ஆக்கந் தேடும் முறையிற்றானே வெளிவர வேண்டும். அவ்வாறு வெளியிடுவதுதானே முறைமையும் பண்பும் ஆகும். ஆனால் அனைத்திதழ்களும் அவ்வாறு உயரிய நோக்குடன் வெளிப்படுகின்றனவா என்றால் அதுதான் இல்லை. சிற்சில இதழ்கள் தவிரப் பெரும்பாலான் இதழ்கள் மொழி, இனம் இவற்றைப் பழித்தும் இழித்தும் கூறி உலாப் போதலைக் காண்கிறோம். நடுநிற்பார்தம் நெஞ்சம் வருந்தும் வகையிலே எழுத்தோவியங்களைத் தாங்கி வருகின்ற அவல நிலையையும் காண்கின்றோம். பொருள் வருவாய் ஒன்றே குறிக்கோள் அவ்விதழ்களுக்கு பெயர் விளம்பரம் ஒன்றே குறிக்கோள் எழுதுவோர்க்கு. விளைவைப் பற்றி எள்ளளவும் கவலைப்படுவதில்லை. இனத்தையும் மொழியையும் இழித்தும் பழித்தும் எழுதினால், பெரு வாரியாக விற்பனையாகும் இதழ்களிலே இடங்கிடைத்து விடுகிறது தந்நலம் விழையும் எழுத்தாளர்க்கு. எங்குங் காணமுடியாத புதுமை இங்கு நிகழ்ந்து வருகிறது தம்பி. குதிரை அவதார மெடுத்து, வெளிவரும் புகழ் பெற்ற வார இதழ் ஒன்று தீபாவளி மலர் வெளியிட்டிருந்தது. அம் மலரில் வெளிவந்த கட்டுரையொன்றில் “பாண்டியன் இமயமலையில் மீன் பொறித்தான்” என்று ஒரு பகுதி