பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - 1. கவியரசர் முடியரசன் 71 | ஆக, இது காறும் கூறிய வற்றால் புரித ல் | ன்னுஞ்சொல் விரும்புதல், பொருந்துதல், முறுக்குதல், ஆராய்தல், ஆக்கப்படுதல் என்னும் பொருள்களைத் தரும் என அறிகிறோம். இனி, இன்று எப்பொருளில் அச் சொல் வழங்கு கிறது எனக் காண்போம். ஆசிரியர் மாணாக்கர்க்குப் புரியும் படி பாடம் சொல் கிறார். இங்கே புரியும் படி f ன்றால் விளங்கும்படி என்று பொருள், புரியாதவன் ான்றால் விளங்காதவன் என்று பொருள். இவன், இதைப் புரியாமல் செய்து விட்டான் என்ற விடத்து, விளங்கா மற் செய்து விட்டான் என்பது பொருள். ாவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இவனுக்குப் புரியவில்லை என்ற விடத்தும், விளங்கவில்லை என்று பொருள். அதனால் நம் காலத்தே புரிதல் என்ற சொல், நன்கு விளங்கிக் கொள்ளுதல் அஃதாவது விளக்கமாகத் தெரிந்து கொள்ளுதல் என்னும் பொருளில் வழங்கு வதை நாம் புரிந்து கொள்ளுகிறோம். இவற்றோடு தூங்குதல்’ என்ற சொல்லைப் பற்றியும் ப்பொ விளக்குவது நல்லது என்று கருதுகிறேன். முது து நல்லது று கரு 凹 'ஒங்கு சினைத் தூங்கு துயில் பொழு தின் (நற் - 87) என்ற நற்றிணைப் பாடல் வரிக்கு, வெளவால் உயர்ந்த மரக் கிளையில் தொங்கிக் கொண்டே துயிலும் வேளையில் என்பது பொருள். இங்கே தூங்கு என்ற சொல், தொங்கிக் கொண்டு என்று பொருள்படுகிறது.