பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள இளவரசனுக்கு. ‘தூங்கு கையான் ஒங்கு நடைய (புறம் 22) என்ற விடத்துத் தொங்குகிற துதிக்கையுடன் ஒங்கிய நடையை உடைய (யானை) என்று பொருள். இவ் விடத்தும் தொங்குதல் என்ற பொருளில் வருகிறது அச்சொல். பெயல் ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள் - (அகம் 158) என்ற அகநானூற்று வரி, 'மழை பெய்தல் நீங்கி, ஒலியடங்கிய செறிந்த இருளையுடைய நள்ளிரவு' எனப் பொருள் தருகிறது. இங்கே 'தூங்கிருள் என்ப தற்குச் செறிந்த இருள் என்பது பொருள். தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா நில னாள் பவர்க்கு - (குறள் 383) என்னுங் குறளில் துங்காமை' என்னுஞ் சொல், ‘சோம்பலின்றி விரைந்து செயலாற்றுந் தன்மை’ எனப் பொருள் தருகிறது. 'துரங்குக துங்கிச் செயற்பால' - (குறள் 672) என்ற குறளில் வரும் தூங்குதல் என்னுஞ் சொல் காலந்தாழ்த்துச் செய்யும் சோம்பல் எனப் பொருள் படுகிறது. இம் மேற்கோள்களால் தூங்குதல் என்ற சொல் செறிதல், தொங்குதல், சோம்புதல் என்னும் பொருள்களில் பண்டு வழங்கப்பட்டு வந்தமை தெரியவருகிறது. அச் சொல், இன்று எப்படிப் பொருள்மாறி வருகிறது என்பதைக் காண் போம். துங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம் ?’ என்ற பாடலை நீ கேட்டிருப்பாய்.