பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் 73; மோனநிலை பற்றிக் கூறும் இவ்வரியில் 'தூங்குதல்’ ானுஞ் சொல் உறங்குதல் என்ற பொருளில் வருகிறது. 'தூங்கா தே தம்பி தூங்கா தே இது நாடறிந்த திரைப் படப் பாடல், ஈண்டும் உறக்கம் என்ற பொருளிற்றான் வருகிறது அச் சொல். து க்கம் சொக்குகிறது, தூங்கு மூஞ்சி என்ற பேச்சு வழக்கில் பறக்கம் என்ற பொருளிலேதான் வருகிறது. சொற்கள் காலப் போக் கில் எப்படியெப் படியெல்லாம் பொருள் மாறி வருகின்றன என்பதை நீ தூங்காமலிருந்து ஆய்ந்து தெரிந்து கொள், இவற்றைத் தெரிந்து கொண்டது போலவே நாற்றம், குப்பை, கண்ணோட்டம் இறும்பூது போன்ற சொற்கள் முன்பு எப்பொருளிற் கையாளப்பட்டன: இப்பொழுது ாப்பொருளிற் கையாளப்படுகின்றன என்பதை நீயே சிந்தித்துப் புரிந்து கொண்டு எனக்கு எழுது. உன் தந்தை முடியரசன்