பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். அங்கள்ே மெய்ஞ்ஞான சபையில் இறையடியார் ஒருவர் பேசியது பற்றி எழுதி யிருந்தாய். தமிழில் வழிபாடு செய்தல் கூடாது; செய்தால் இறைவன் செத்து விடுவான் என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார் என எழுதியிருந்தாய். எனக்கு நகைப்பும் எரிச்சலும் மாறி மாறித் தோன்றின. அவ்வாறு பேசியவர் தமிழர்தானா என்ற அய்ய ஏற்பட்டது. அவரைத் தமிழச்சிதான் பெற்றனளா என்று வியப்புற்றேன். அடுத்து, அவர் இறைவனை நம்புகிறவர்தானா என்றும் அய்யுற்றேன். ஏனெனில் இறைவன் செத்து விடுவான் என்று சொல்கிறாரே, இறைவனுக்கு இறப்புண்டா' இறப்பு அவனுக்கு உண்டென்றால் அவன் இறைவனாக முடியுமா ? பேசியவர்தம் பேதைமை புலப்படுகிறதே தவிர அப் பேச்சில் உண்மையோ, பக்தியோ இருப்பதாக தெரியவில்லை.