பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - 81) மீனாட்சியம்மை குழந்தை வடிவில் வந்து, மன்னன் மடியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததாக உரைப்பர். தேவாரம் பாடிய மூவரும் அந் நூல்களை எம்மொழியிற் பாடினர் ? R . வாசகர் மொழிய, இறைவனே நேரில் வந்திருந்து எழுதியதாகச் சொல்லப்படும் திருவாசகம் எம் மொழியில் எழுதப்பட்டது ? கோபுரத்திலிருந்து வீழ்ந்த அருணகிரியை ஒடி வந்து காப்பாற்றிய முருகன் புகழ்பாடும் திருப்புகழ் எந்த மொழியில் எழுதப்பட்டது ? இவற்றை யெல்லாம் கடவுளர் விரும்பவில்லையா ? ஏற்றுக்கொள்ள வில்லையா ? ஏற்றுக் கொண்டனர் என்று அந்த அடியவர் கூட்டந்தானே நமக்குச் சொன்னது. இவ்வாறு கூறிவிட்டு, இப்பொழுது, தமிழைக் கேட்டால் கடவுளர் செத்து விடுவர் என்றால், இது கடவுளர் மீது கொண்ட பற்றா ? தமிழ் மீது கொண்ட வெறுப்பா ? அன்றி ஏ மாற்று வித்தையா? நன்கு ஆய்ந்து ஒரு முடிவு செய். உன் தந்தை முடியரசன்