பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - கவியரசர் முடியரசன் - SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 85) 'அய்யா! நீங்கள் யார் ? சித்து விளையாடல் செய்பவரா ? என் முதுமையை ஏன் மாற்றினிர் ? பிறவியைக் கடக்கும் எல்லையில் இருந்த என்னை மீண்டும் தொடக்க நிலைக்குக் கொண்டுவந்து விட்டீர்களே ! அருள் கூர்ந்து விவரமாக அனைத்தும் கூறியருளுங்கள்’ என்று வணங்கி வேண்டி நின்றாள். 'அம்மையே அறிதுயிலமரும் ஆண்டவன் பால் அன்பு கொளும் ஆழ்வாருள் ஒருவன் யான், திருமழிசை ஆழ்வார் என்று என்னை அழைப்பர். ஆண்டவனுக்குப் பணி பூண்டொழுதும் நினக்கு முதுமை கூடாது என்பதால் | இளமையருள இறைவனை வேண்டினேன்; அவனும் அருளினன் என்று கூறிக் கொண்டே நடந்துவிட்டனர் ஆழவாா. ク - 2くーメー ×ー★ース一 ‘அமைச்சரே தொண்டை நாட்டில் இதுவரை கேள்விப்படாத விந்தையாக இருக்கிறதே ! மூதாட்டி குமரியாவதா ? இது பொய்யா ? புனைந்துரையா ? முன் பெல்லாம் காயகற்பம் உண்டால் இளமை திரும்பும் ான்று சொல்வார்கள். இவள் அப்படியொன்றும் மருந்து சாப்பிடவில்லையாம். ஒரே ஒரு பாட்டால் அதுவும் தமிழ்ப்பாட்டால் முதுமை மாறி இளமை பெற்றாளாமே !’ இது பல்லவன் வினா. 'பல்லவ மன்னரே ஆம்; உண்மைதான். ஆழ்வார் பாடல் அருள் வலியுடையது; ஆக்கவும் அழிக்கவும் வல்லது. அப்பெண் மணியை நானே நேரில் பார்த்தேன். கட்டுக்கதை யன்று; கடவுள் திருவருள். என அமைச்சர் யிடை தந்தார்.