பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - T (88. - அன்புள்ள இளவரசனுக்கு ெ திரிவோரை ஏன் இப்படி யெல்லாம் பழித்துரைக்கின்றிர் இஃது அக்குரலின் பணிந்துரை. அமைச்சரே ! யார் இவர் ? என் பேச்சுக்கெல்லாம் மறுப்புரைத்த வண்ணம் இருக்கின்றார் ! அரசே! இவர் ஆழ்வாரின் உண்மை மாணவர் ? ஆழ்வார் பாட மறுத்ததும் இவரை அழைத்து வந்தேன். ஆழ்வாரின் மாணவரா ? அதுதான் இவருக்குக் கோபம் வருகிறது. அவருடைய உண்மை மாணவரென்றால் இவரே நம் மீது பாடலாமே. நான் ஏ ன் இளமை யை விரும்புகின்றேன். உலக இன்பங்களை இன்னும் நுகரவா ? நுகர்ந்தது போதும். நாட்டுக்கு இன்னும் சில காலம் நன்மை செய்யலாம் என்ற ஆர்வந்தான். அதனால் இந்த மாணவரே பாடட்டும். அமைச்சரே இவருடைய பெயர் ? 'கணி கண்ணன் என்று இவரை அழைப்பார்கள். அமைச்சர் மறுமொழி. 'நன்று கணி கண்ணரே ! எம் முதுமை நீங்கப் பாடல் ஒன்று நீரே பாடுக ! என மன்னன் உரைத்தான். “மன்னர் மன்னா! பொறுத்தருள்க ! எம் ஆசிரியர் விருப்பிற்கு மாறாக நாமும் நடவோம்' என அவர் மறுமொழி தந்தார். 'பார்த்தீரா அமைச்சரே! நான் முன்பே சொன்னேனே இது கட்டுக் கதை என்று. கிழவி குமரியாவதாம். இதில் ஏதோ சூது இருக்கிறது. உண்மை என்றால் இருவரும் ஏன் என் மீது பாட மறுக்க வேண்டும் ? பொய் யென்று