பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்துவிட்டால் அரச தண்டனை கிடைக்கும் ! என்ற அச்சம். இது மன்னன் கூற்று. - 'வேந்தே ! யாருக்கு அச்சம் ? யாம் எவருக்கும் அஞ்சோம்; அஞ்சுவதுமில்லை; அஞ்ச வருவதுமில்லை. ஆண்டவன் ஒருவனே தலைவன். அவனுக்கே அஞ்சி நடப்போம் கணி கண் ண ன் புலவனல்லவா ? அவன் பேச்சில் வீரம் கலந்திருந்தது. பல்லவன் சீற்றம் மிகுதியாகிவிட்டது. கணிகண்ணரே ! ஒன்று, பாடியாக வேண்டும்; இன்றேல் எம் நாட்டைவிட்டு ஒடியாக வேண்டும்; இஃது எம் ஆணை’. 'அரசர் பெரும இரண்டாவது ஆணையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். என்று சொல்லி விட்டு கணிகண்ணன் விரைந்து நடந்தான். கணிகண்ணன் நிகழ்ந்ததையெல்லாம் ஆழ்வாரிடம் உரைத்து விடைபெற்றுக் கொண்டு சென்றான். உண்மையுள்ள அந்த மாணவனைப் பிரிந்திருக்க ஆழ்வாருக்கு முடியவில்லை. மனம் குழம்பிக்கொண்டே காஞ்சிப் பெருமாளிடம் சென்று, கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள். என்று பாடி முடிக்கு முன் திருமால் எழுந்தார்; பாம்புப் படுக்கையைச் சுருட்டித் தோளில் போட்டுக்