பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - ET_ கவியரசர் முடியரசன் 91. தான் நான் இப்படி நடந்து கொள்கிறேன். சரி, நேரம் ஆகிறது. நான் வருகிறேன். நீ இங்கேயே இரு' என்று சொல்லிக் கொண்டே நடந்தார். 'உயிரன்றி உடலை மட்டும் தனித்திரு என்று கூறுவது போல் இருக்கின்றது தங்கள் கூற்று. உங்கள் மனத்தையே பித்துப்பிடிக்கச் செய்கின்ற அந்தத் தமிழ் மொழிக்காக நானும் சிறிது துன்பப்பட்டால் தான் என்ன ? எனத் திருமகள் கெஞ்சினார். தேன் மொழி உன்னோடு உரையாடி நான் வெல்லவா ? சரி, வா’ என்று இலக்குமி கையைத் தம் கையில் கோத்துக் கொண்டு வயல் வரப்பெல்லாம் கடந்து திருமழிசையார் சென்ற வழியே சென்றுவிட்டார். ツーメ 〜 つ ー ズ ーメー “அமைச்சரே! நம் நாட்டில் என்றுமில்லா வறுமை இன்று வரக்காரணம் என்ன ? நம் ஆட்சியில் குறையை முன்னரே கண்டு, குறை நீக்கி முறை செய்யாமல் ஏன் இருந்தீர்??” 'பல்லவ வேந்தே ! நம் நாட்டை விட்டுத் திரு நீங்கி விட்டது. "ஏன் ? நீங்கும் வரை ஏன் பேசாதிருந்தீர்? “மன்னர் பெரும கணிகண்ணனை நாடு கடத்தி னோம். அதனை அறிந்த திருமழிசையாழ்வாரும் கணி கண்ணன் பின் சென்றனர்; ஆழ்வார் பின்னே ஆராவமுதன் சென்றான்; அவன் பின்னே அலர்மேலு மங்கையும் ஏகினாள். இதற்கு யார் என்ன செய்ய இயலும்?"