பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முடியரசன்- 97) முடியவில்லை. கிளர்ந்து எழுந்தேன் சிகா கிரீசுவரனை நோக்கி, அய்யா, து பாஷைத்து வேஷம் என அறியாமல் பேசுகிறீரே குடுமியான் மலையப்பன் என்ற தமிழ்ப்பெயரை, நீர் சிகா கிரீசுவரன் ான வடமொழியில் மாற்றிப் பெயர்வைத்துக்கொண்டு அவரைப் போய்த் துவேஷி என்கிறீரே (குடுமி-சி.கா: மலை- கிரி; அப்பன்-ஈசுவரன்) யார் துவே ஷி ? இந்த நாட்டிலே பிறந்து, இங்கேயே வளர்ந்து, இந்த மண்ணிலேயே முடியப் போகும் நீர், தமிழ்ப் பெயரை மாற்றி வடமொழிப் பெயராக வைத்துக் கொண்டது துவேஷமா ? தமிழ்மகன் தன் தாய் மொழியில் பெயர் வைத்துக் கொண்டது துவேஷமா ? எது துவேஷம் ? இத்தகைய துவேஷிகளை, தமிழ் மொழியின் பகைவர்களை இந்த நாட்டைவிட்டே விரட்ட வேண்டும், விரட்டாமல் விட்டால் இப்படித்தான் குறும்புத்தனம் செய்வீர் என்று சற்றுக் கடுமையாகவே பேசி விட்டேன். அதன் பின்னரே அவர் வாயடைத்துப் பேசா திருந்தார். இதை ஏன் இங்கே கூறினேன் என்றால், நம் நாட்டில் நம் மொழிக்கு உரிமை வேண்டுமென்றால் இப்படித்தான் துவேசம் என்று கூறித் திசை திருப்பிவிடுவார்கள். அதை நம்பி விடாதே ! என்னைப் பிறவியால் தாழ்ந்தவன் ான்று சொல்லாதே, நீயும் நானும் சமம் என்று சொன்னால் உடனே சாதித்துவேசம் செய்கிறான் என்று கிளப்பிவிடுவர். ரமாற்று வித்தையில் கை தேர்ந்தவர்கள் அவர்கள். நீ ரமாளியாகி விடாதே ! அண்மையிற் சிலர் மாநாடொன்று கூட்டினர். சில முடிவுகளும் செய்தனர் ஊர் தோறும் வட மொழிப்பள்ளிக்