பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 121 ஆன சுகதே கரு சுகதே அரசு ஆன : க.க - 8 வெள்ளை மயில் ஆடும், நீல மயில் அசையும், குயில் பாடும் கருடன் கழுகு முதலியவை சந்தோஷம் தாங்காது 'கை' என்று சத்தமிடும். வாணி! வாணி சாந்தி! கருணாலயரே, இவர் ஒரு கவிஞர்! தனிக் கவனத்துடன் காப்பாற்றப்பட வேண்டியவர். கட்டளை, வருகிறேன். (போகிறான்) (கவிஞர் மற்ற கைதிகளுடன் சேர்ந்து முன்னர் பாடிய அதே துயரப் பாடலைப் பாடுகிறார். அப்போது அரசு ஊர்வசி வருகிறாள்) கவிஞர் திலகமே! கலைகளின் களஞ்சியமே! என்னை நன்றாகப் பாருங்கள்! என்னைக் கூடவா தங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. நன்றாக எண்ணிப் பாருங்கள். நான் தான் உங்கள் ஊர்வசி, நான் கூறிய யோசனையைக் கேட்டிருந் தால் உங்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டிருக் காது. அரண்மனை சுகபோகத்தில் அகில மகாகவி ஆகியிருக்கலாம் (அமாவாசை இருட்டிலே அரைகுறையாக ஆடும் நிழல்களைப் போலக் கவிஞனின் உள் மனதில் கடந்தகால நிகழ்ச்சிகள் தோன்றி மறைகின்றன. உள் நாடகத்தில் நடிக்கப்பட்ட படகு கவிழும் காட்சியைத் திரும்பவும் காட்டலாம் உருவெளிக் காட்சி மறைந்ததும் பாடுகிறார்) படைவீரப் பட்டாளம் பாய்ச்சிய ஈட்டிகள் பாய்ந்ததென் நெஞ்சிலம்மா - எந்தன் பச்சைக் கிளிகளை பத்தினி தன்னையும் பழிவாங்கி விட்டதம்மா - சூழ்ச்சி பழிவாங்கி விட்டதம்மா ஆட்சி பட்டயம் தீட்டுதம்மா!