பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் , 11 பெரிய வீராவேசப் பிரசங்கம் செய்துவிட்டுத் தன்னைத்தானே குத்திக்கொண்டு சாகிறான். அவன் உண்மையில் பகை நாட்டைச் சேர்ந்த ஐந்தாம் படைக்காரன் என்று வெளியாகிறது. அதோடு, கவியின் குமாரன் திடீரென்று அரசகுமாரனாக மாறுகிறான். இரண்டு ஜதை இனிய திருமணங்கள் நடைபெறுகின்றன. கவிஞர் தமது கனவு நிறைவேறிவிட்டதாக ஆனந்தப்படுகிறார். பேஷாக ஆனந்தப்படட்டும் முப்பது வருஷம் கஷ்டப்பட்டவர் கொஞ்சம் சந்தோஷப்பட்டுவிட்டுப் போகட்டுமே! - 'கவியின் கனவு’ என்னும் இந்த நாடகம், முன்னொரு சமயம் சக்தி நாடக சபையினரால் சேர்ந்தாற்போல் 150 நாட்கள் நடிக்கப்பட்டுத் தமிழ்நாட்டில் மிகப் பிரசித்தி அடைந்தது. ஒரு நாடகத்தில் - இருக்க வேண்டிய உணர்ச்சி வேகங்கள், வெவ்வேறு குண சித்திரங்களையுடைய பாத்திரங்கள், கவர்ச்சி கரமான நிகழ்ச்சிகள், விறுவிறுப்பான சம்பாஷணைகள் ஆகிய எல்லா அம்சங்களையும் வைத்து இந்த நாடகத்தை இயற்றிய ஆசிரியர் திரு. எஸ்.டி. சுந்தரம் அவர்கள், 1942-இல் விடுதலைப் போராட்டத்தில் சிறைப்பட்டிருந்த தேசபக்தரும் தேசிய வீரருமாகிய திரு. எஸ்.டி. சுந்தரம் பல உயர்ந்த இலட்சியங்களையும் புரட்சிகரமான கருத்துகளையும் புகுத்தி இந்த நாடகத்தை அமைத்திருக்கிறார். தற்சமயம் தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் திரு. எஸ்.டி. சுந்தரம் ஒருவர் நாடகத்தைப் புத்தக வடிவில் படித்ததிலிருந்தே இந்த அபிப்பிராயம் என் மனத்தில் தோன்றியது. சென்ற வாரத்தில் சென்னை அமெச்சூர் ஆர்ட்ஸ் என்ற பொழுதுபோக்கு நாடகக் கோஷ்டியார் இந்த நாடகத்தை நடத்தியபோது பார்க்கும்படியான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவியின் கனவு நாடகத்தை அரங்க மேடையில் நடித்துப் பார்க்க வேண்டும் என்ற என் நெடுநாளைய கனவும் நிறைவேறியது. நன்கு கல்கியின் கலைச்செல்வம்'