பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 139 சுகதே கனி சுகதே கனி சுகதே கனி சுகதே கனி சுகதே கனி பக்கத்தில் சும்மா அவர் படமும் இருக்கட்டுமே என்று எழுதிப் பார்த்தேன். உம் என்ன செய்வது? உனது கபடமற்ற இந்த அன்பை அந்த நாடோடிகள் அறிய முடியாதபடி ஆண்டவன் செய்துவிட்டானே! ஏன் அண்ணா உன்னுடைய’ என்று ஒருமையில் கூறுகின்றீர்கள். உங்களுக்கு மட்டும் அவர்கள் மேல் அன்பில்லையா? ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால். அவர்கள் அரண்மனைக்குள் போனதிலிருந்து மறைந்துவிட்டதா? இன்றுவரையில் நீடித்திருந்ததம்மா! இனிமேல் அதை மாற்றிவிடப் போகிறீர்களா? அடியோடு மறந்துவிடப் போகிறேன், கனி மொழி! அவர்கள் செய்த அப்பேர்ப்பட்ட பெருங்குற்றம் என்னண்ணா? * (கையிலிருந்து ஒலையைத் தத்து, கனிமொழி! பொறுமையோடு படித்துப் பார். (படிக்கிறாள், அழகுமணனி நாட்டின் மகர குண்டல முடியரசும், சக்கரவர்த்தியுமான வீர சிம்மனின் புதல்வி இளவரசி மேனகா தேவிக்கும், நாட்டின் கலைமணி மணிவண்ணருக்கும், அடுத்து வரும் முழுமதி நாளில் திருமணம் நடத்தப் பெருங் குடிகள் அவை தீர்மானித்து விட்டது. அன்று தாங்களும் வந்து எமது அழைப்பைப் பெருமைப் படுத்த அழைக்கிறோம். இங்ங்னம் உங்கள் வேந்தன் வீரசிம்மன் - கலைவாணி ஊர்வசி ‘சர்வாதிகாரி (பெருகி வரும் கண்ணிரைத்