பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 17 ஐந்தாம் படைகளால் ஏவப்பட்ட படையெடுப்பை எதிர்க்கப் புறப்படுகிறான். - - அரண்மனையில் உருவாகிய நாகரிகமான சதித்திட்டத்தை அறியாமல் மணிவண்ணனும், சாந்தியும் அரச மாளிகையில் வசிக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. இளவரசி மேனகா அடிக்கடி மணிவண்ணனை வட்டமிடுகிறாள். சர்வாதிகாரி தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளு வதற்காக, இளவரசி மேனகைக்கும் பெருங்கலைஞன் மணி வண்ணனுக்கும் தொடர்புண்டு என்ற கதையை அரசன் மனத்தில் ஏற்றி, அதன் மூலம் அரசனை அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும்படி செய்கிறான். அண்ணன் சுகதேவன் எல்லைப்புறத்தில் எதிரிகளால் காயமுண்ட செய்தி கேட்ட கனிமொழி, தலைநகரை விட்டு எல்லைப்புறப் போர்க்களத்துக்குச் செல்கிறாள். இந்த நெருக்கடியான குழப்பச் சூழ்நிலையில் இளவரசி மேனகைக்கும் கலைஞன் மணிவண்ணனுக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. ஆனால், கலைமணி இதற்கு உடன்படவில்லை. சர்வாதிகாரி எப்படியும் இந்தத் திருமணத்தை அவசரமாக நடத்திவிட்டுத் தான் சாந்தியை அடையத் திட்டமிட்டு வேலை செய்கிறான். அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகின்றன. எல்லைப்புறப் படை வீட்டிலிருக்கும் சேனாதிபதி சுகதேவுக்கும், இளவரசியின் திருமண அழைப்பு வருகிறது. பாசறை சுகதேவ் மிகவும் வருந்துகிறான். கனிமொழி, 'இதெல்லாம் சர்வாதிகாரியின் சூழ்ச்சியாயிருக்கும். மணிவண்ணன் ஒருக்காலும் இளவரசியைக் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்” என்று அண்ணனுக்குச் சமாதானம் சொல்லுகிறாள். தலைநகர் அரண்மனையில் அடைபட்ட மணிவண்ணனும், சாந்தியும் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயலுகின்றனர்.