பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே சர்வா : கவியின் கனவு உன் பேச்சு வன்மைக்கு மக்கள் மயங்கும் காலம் மலையேறி விட்டது. உண்மையைக் கூறிவிடு. உன்னுடன் அழிவு வேலை செய்து உழைத்த மற்ற ஐந்தாம் படைகளை எல்லாம் எங்கே அனுப்பி னாய் உண்மையைக் கூறிவிடு. (சிரிப்பு, அவர்கள் தப்பிச் சென்ற கப்பல் இந்நேரம் பனிக்கடலைக் கடந்திருக்கும். கனவு காணாதே! அத்தனை பேரும் கைதிகளாகி விட்டனர். (சிரிப்பு வருந்தவில்லை. ஒருசிலர் போனால் என்ன? எங்கள் திட்டம் மறுப்டியும் எரிமலை யூற்றாய்ப் பெருகும். எத்தனை கோடி உயிர் கொடுத்தேனும் இந்த நாட்டை என்றேனும் ஒருநாள் அடிமை கொண்டே தீருவோம். நான் ஒருவன் போகலாம். ஒராயிரம் சர்வாதிகாரிகள் உங்களை ஒழிக்கக் கங்கணம் கட்டிவிட்டார்கள். என்றேனும் ஒருநாள் உங்கள் கோட்டையில் எமது கொடியை ஏற்றியே திருவார்கள். அவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஏன்? இங்கே கூடச் சிலர் இருக்கிறார்கள். என்னை என்ன செய்ய வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அதை விரைவில் செய்து கொள்ளுங்கள்! எங்களுக்கு உயிர் பெரிதல்ல, உள்ளத்தின் இலட்சியமே பெரிது. - என் பொறுமை எல்லை மீறுமுன் சொல்லிவிடு, உன் இரகசியத்தை எங்கே உன் முன்னணி ஒற்றர் படை? என் ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என் தோழர்களைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தின் ஒரு சிறு அணுவைக்கூட எங்கள் இரத்தத்தில் காண முடியாது, ம்.