பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 கவியின் கனவு சிகதே : கவி பெரியோர்களே! காரிருள் அகன்றது. கதிரொளி வந்தது! இன்று முதல் நமது நாட்டில் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். தாயின் மணிக்கொடியின் கீழ் முதல் தலைவராக வீற்றி ருக்கும் பெருமை, நமது மகாகவி ஒருவருக்கே உரியது. அவரே நமது நாட்டின் தந்தை விடுதலை வீரவிழாவின் தலைவர். வாழ்க மகாகவி வாழ்க நம் தலைவர்! என் அருமை மக்களே! பெரியோர்களே அரசன் என்றொரு தனிப் பதவி தேவையில்லை. நாட்டின் நம் ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு குடியர சாக விளங்கும் அளவுக்கு, மக்கள் பொறுப்புள்ள வர்களாக வாழ்ந்து நாட்டைக் காப்பது நம் கடமை. சுதந்திரம் பெற்றது பெரிதல்ல - அதைக் கட்டிக் காப்பது கடினமான காரியம். சுதந்திரம்! நம் வாழ்வின் ஜீவன்! நாகரிகத்தின் சின்னம்! சுயமரியாதையின் ஆத்மா வீரத்தியாகிகளின் வெற்றிப் பரிசு! இதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பது நம் கடமை. இந்தக் கடமையிலிருந்து நாம் தவறினால், நாளை நம்மைச் சரித்திரம் கேலி செய்யும் தர்மம் தண்டிக்கும்! நீதி துரக்கிலேற்றும்! மனச்சாட்சி சபிக்கும் மனித இனமே நம்மைச் சீ என ஒதுக்கித் தள்ளிவிடும்! எச்சரிக்கை சுதந்திரம் நம் உயிரின் உயிர்! உணர்வின் உணர்வு! அந்த உணர்வுதான் நம்மையும் நம் சந்ததிகளையும் காக்கும் ஜீவசக்தி! வாழ்க சுதந்திரம் வளர்க நம் நாடு வாழ்க நல் உலகம்! (உள்திரை விலகுகிறது)