பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - . 19 சிறையில் உள்ள அதிகாரிகளில் பலர் சுகதேவனின் நண்பர்கள். ஆகையால், இவர்களுக்கு ஒரு குறைவுமில்லாமல் பார்த்துக்கொள்கின்றனர். தனது செல்வத்தங்கை சிறைப்பட்ட செய்தி வெற்றிவாகை சூடிய சுகதேவனுக்கு எட்டுகிறது. புதுவெற்றியைக் காணத் தலைநகருக்கு வருகிறான். சேனாதிபதி சுகதேவன் சாந்தியைச் சர்வாதிகாரியிடமிருந்து மீட்கிறான். கயவன் ஓடிவிடுகிறான். அவனைத் துரத்துகிறார்கள் வீரர்கள். - சிறையில் மணிவண்ணனும் கனிமொழியும், அவர்களை ஒன்றுகூட்டிய 'கனவு’ என்னும் நாடகத்திலிருந்து ஒரு அமுதப் பாடலைப் பாடிக்கொண்டிருக்கையில், நீண்ட காலத்து இருளுக்குப் பின் காலைக் கதிரொளியைக் கண்டது போல் குழந்தைகளைக் கூர்ந்து பார்க்கிறார் கவிஞர். அவர் தம் இன்பக் குரலை இதயக் குயிலின் ஓசைபோல் அனுபவிக்கிறார். அந்தக் கைதியின் சோகமான நிலைக்கும் அந்தப் பாடலுக்கும் ஏதோ நெருங்கிய சம்பந்தம் இருப்பதை யறிந்து மேலும் பாடுகிறார்கள். பல ஆண்டுகளுக்குமுன் காணாமல் போய் மீண்டும் கிடைத்துவிட்ட குழந்தைகளைப் பார்ப்பது போல் திகைப்புடனும் குழப்பத்துடனும் கொந்தளிப்புடனும் வாடும் கனிமொழியையும் மணிவண்ணனையும் மாறி மாறிப் பார்க்கிறார். நீண்ட நெடுங் காலமாக மெளன. உறக்கம் கொண்டிருந்த மனப்பறவைக்கு, புதிய சிந்தனைச் சிறகுகள் முளைத்தது போன்ற மறுமலர்ச்சியை அடைகிறார் கவிஞர். . அந்தக் கைதியின் அறிவுக் கலக்கம் சிறிது சிறிதாகத் தெளிவடைகிறது. அந்த நேரத்தில் சேனாதிபதி, சாந்தியுடன் சிறைக்குள் வருகிறான். அந்தக் கைதிதான் காலஞ்சென்ற மன்னரின் உயிர் நண்பர் என்பதையும், நாட்டின் சிறந்த தத்துவஞானி என்பதையும், சாந்தியின் தந்தையும், மணிவண்ணனது வளர்ப்புத் தந்தையும்