பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஊர்வ சர்வா ஊர்வ கவியின் கனவு !பெருமூச்சு/ ஆம் رفاتيني يgے “ر/7DL٪L/ره تئ٪yDiي) சிறை மந்திரிப் பதவியில் கூட அச்சிறுவனுக்கே வெற்றி. உம்! சுகதேவன் - அவன் ஒரு சிறு பாம்பு! இந்த ஊர்வசி நினைத்தால் தனது இடது கால் அணியால் அவனை உருத்தெரியாமல் நசுக்கிவிட முடியும். மடையன்! மன்னனின் மகள் - என் வளர்ப்புப் பெண் மேனகையை மணந்து, நம்முடைய அணியில் சேர முடியாதென்று கூறி, அன்று என்னையே ஏளனம் செய்தான். ஆறாத பெரும் பழிக்கு ஆளாகி விட்டான். இனி அவன் வாழ்வது கடினம். - ஊர்வசி, உன்னைப் பற்றி நீ நினைக்கும் உனது எனது எண்ணம் மிகவும் அதிகமானது! இளைஞர்கள் அவனைத் தெய்வமெனக் கொண்டாடுகிறார்கள். நம் திட்டப்படி நமது எல்லைப் படைகள் எதிர்த்து வந்தால் அவை களை வெல்லும் வல்லமையும் பெற்றுவிட்டான் சுகதேவன்! அதற்கும் ஏற்றதொரு திட்டம் ம்மிடம் தோன்றாமலா போய்விடும்? முது.ெ லும்பற்ற ஒரு மனிதப் புழுவாய், இரவும் பகலும் என் படுக்கை அறையிலேயே சுருண்டு கிடக்கும் வேந்தன் வீரசிம்மனிடம் கூறி, வேண்டிய ஏற்பாட்டை விரைவில் செய்துவிடுகிறேன். நாம் மட்டும் அரசின் பெயரால், இனமொழி சாதி வேற்றுமை உணர்ச்சியின் பெயரால், இந்நாட்டில் ஐந்தாம் படைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். உமது இன்பப் பேச்சின் திறமையால் இளஞ் சோம்பேறிகளை இயக்கிக்கொண்டே இருங்கள்! வாதங்கள் பேசுங்கள்! வேலை செய்ய முடியாமல் வேறு வழியில் திருப்புங்கள்! முடியாத தத்துவங்களை முரணாகப் பேசுங்கள்!