பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 49 முன்னேற்றத்தை முடக்கி மூலையிற் போடுங்கள்! நாவன்மையால் நாட்டு வன்மையை நசுக்கி வையுங்கள். பேச்சின் பத்தில் பெரும்பற்றுள்ள வர்கள், இந்தச் செயலற்ற சோம்பேறிகள்! பேசுங்கள்! பேச்சின் எல்லைகளுக்கப்பால் அவர் களைச் சிலையாக்கி வையுங்கள்! இவர்கள் வெறும் வார்த்தைப் பித்தர்கள்! சொற் கோமாளிகள் சோற்றுப் புலவர்கள்! ஈசல் கூட்டத்தை வெல்வதற்கு இடியின் துணை தேவையில்லை - கண்ணா! இந்த மக்களை வெல்வதற்கு ஆயுதப்படை தேவையில்லை. வெறும் பேச்சுப் படையே போதும். என்ன வேண்டும் சொல்லுங்கள்! இதைப் போல் ஆயிரம் அரசுகள் வேண்டுமா? சொல்லுங்கள்! இந்த ஊர்வசியின் கடைக்கண் ஒருமுறை அசைந்தால் போதும் கால்விரல் ஆணை யிட்டால் போதும் அரசன் - அரசியல், சட்டம் - சாத்திரம், திட்டம் - தேசம் எல்லாம் அரை நொடியில், காந்த மலையைக் கண்ட இரும்புத் துண்டுகளாகி என் தாமரை அடிகளில் தாமாக வலிய வந்துவிழும் கலங்காதீர்கள். கள்ளிலே மயக்கம்! காரிகை முயக்கம்! கடமையில் தயக்கம்! கலையிலே உருக்கம் - இவையன்றி வேறொன்றுமே அறியாத கோழைகளைக் கொண்டதொரு ஏழைகளின் நாடு இது! முட்டாள்களின் சொர்க்கம் இந்த மூட வள நாடு! இதை நம் வயப்படுத்துவது, நமக்கு இனிய மது அருந்துவது போன்ற எளிமையான வேலை. இதற்காக நமதின்பம் கொஞ்சங்கடிடக் குறையக்கூடாது, துரையே! அரசியல் வேறு; ஆனந்தம் வேறு பொது வேலை வேறு மது வேலை வேறு! என் குரல் எப்படி மெருகிடப் பட்டிருக்கிறது பார்த்தீரா? என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது..?