பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : அரண்மனை அந்தப்புறம் காலம் : நள்ளிரவு (சர்வாதிகாரி மேனகையுடன் இருக்கிறான். கண்டாகர்ணன் ஓடிவந்து) - கண்டாகர்ணன் : சாமி! அவசரம் அந்தப் பனிநாட்டுத் துரதுவர்கள் தங்களைப் பார்க்கக் குகையில் காத்திருக்கிறார்கள். சர்வாதிகாரி : சந்தர்ப்பம் தெரியாத மடையர்கள். கண்டா கர்ணா: ஆராய்ச்சிக்குரிய பொருள்; அரசியல் பெரியதா? அந்தப்புரம் பெரியதா? ஆம்; சுவாமி யோகத்தில் இருப்பதாகப் போய்ச் சொல் பிறகு பார்க்கலாம். பனிநாட்டு ஐந்தாம் படைகளைப் பொறுத்திருக்கச் சொல்! கண்டா: ஆகட்டுங்க! அந்தப்புரத்தைவிட இந்தப்புரந் தாங்க பெரியது. (மேனகை வந்து கண்களை மூட/ சர்வா : ஆகா.! என் அன்பைப் பெருக்கும் கல்வியில் மிகத் தேர்ந்துவிட்டாய். நீ சகல கலைகளிலும் தேறவேண்டும். - மேன : நீங்கள் சொல்லிக் கொடுத்தபடிதான் நடந்தேன். உங்களுக்கு என்மீது பிரியமே இல்லை. சர்வா : சென்றதற்குச் சிந்தை செய்யாதே. உன் தந்தையும் சிற்றன்னையும் நாடகத்திற்குப் போய் விட்டார் £Girst? -