பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ੋਨ਼ assos's இடம் : சர்வாதிகாரியின் மந்திராலயம் (பயங்கர மந்திரவாதியைப்போல் காட்சி தருகிறார் சர்வாதிகாரி) கண்டா : சர்வாதிகார தேவர் வாழ்க அண்ணலே, இது என்ன மாற்றம்? - - சர்வா : கண்டாகர்ணா, நீ முட்டாள். யோகத்திலிருந்த சாமியின் ஞானநிலை பல படிகளைக் கடந்து இப்போது வானத்தின் உச்சிக்கே போக இருக்கிறது. யோகம் வேகமாக எத்தனை போக மாக வேலை செய்கிறது. தெரியுமா? கண்டா : தெரியுமே! சர்வா : ஆமாம்! கண்டவர்கள் விண்டதில்லை; விண்ட வர்கள் கண்டதில்லை. தெய்வத்தின் பெயரைச் சொல்லியே இந்த மக்கள் மந்தையைக் கொல்ல முடிவு செய்துள்ளோம். - கண்டா : அப்படியே செய்வோம்! தேவரீர் விருப்பம். மூச்சுவிடாமல் பேசுவோம். பிரச்சாரப் படைக்கு ஆணையிடுங்கள். பேச்சுவண்ணம் படைத்த நாம் வைத்ததுதானே நீதி எதை, எவன், எங்கே, எப்படிச் சொன்னாலும் அதை, அங்கே, அப்படியே, அவ்விதமே நம்பிவிடக்கூடிய அப்பாவி மக்கள் இருக்கும்வரை, நாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அண்ணலே! ஆமாம், தெய்வத்துக்கு ஆயிரம் உருவம், பதினா யிரம் பெயர்கள் உண்டே இந்த மக்களுக்காக எதைத் தேர்ந்தெடுத்தீர்கள்?