பக்கம்:கவி பாடலாம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தரவு கொச்சகக் கலிப்பா

கம்ப ராமாயணம் முதலிய காப்பியங்களில் வரும் நான்கடிச் செய்யுள் ஒன்று உண்டு. அது தரவு கொச்சகக் கலிப்பா என்று பேர் பெறும். கலிப்பாவின் இலக்கணத்தை இன்னும் நாம் பார்க்கவில்லை. இலக்கியங்களில் பெருக வழங்கும் செய்யுட்களையே ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்து வருகிறோம். யாப்பிலக்கணத்தில் உள்ள முறைப்படி எழுத்து, அசை, சீர், தளை, தொடை, அடி, பா, பாவினம் என்று நாம் இப்போது பார்க்கவில்லை. ஆகவே, கலிப்பா வகை எல்லாவற்றின் இலக்கணத்தையும் தெரிந்து கொள் வதற்கு முன் தரவு கொச்சகக் கலிப்பாவைப் பற்றிமட்டும் இப்போது தெரிந்து கொள்ளலாம். -

கலிப்பாவுக்குப் பல உறுப்புக்கள் உண்டு. அதன் முதல் உறுப்புத் தரவு; கடைசி உறுப்பு, சுரிதகம். ஒரு தரவு மாத்திரம் தனியே வருவது தரவு கொச்சகக் கலிப்பாவில் ஒரு வகை. அதுவே விருத்தம் பயின்று வரும் நூல்களில்

வரும. . . .

இந்தத் தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளால் ஆனது. ஈரசைச் சீர்களாகிய மாச்சீரும் விளச் சீரும் மூவசைச் சீர்களுள் காய்ச்சீரும் உடையதாகி வரும். முழுதும் காய்ச்சீர்களால் வருவதும் உண்டு. ஈரசைச் சீர் வரும் போது மாச்சீருக்கு முன் நிரை வரும். மற்றவை எப்படி வேண்டுமானாலும் வரும். - “ .

எந்நாளும் மங்காத இளமையெழில் உறுகுமரன் மின்னாளும் வடிவேற்கை வித்தகன்சே வற்கொடியோன் முந்நான்கு திருக்கரத்தோன் மோகைநகர்க் காந்தமலை மன்னாவான் தனைமறவா மாண்பினர்துன் படையாரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/104&oldid=655691" இலிருந்து மீள்விக்கப்பட்டது