பக்கம்:கவி பாடலாம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பிலக்கணம் - 105

பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நாலடியால் வரும் தரவு கொச்சகக் கலிப்பாவைப் பற்றி மாத்திரம் தெரிந்து கொண்டால் போதும். இது பா வகையில் ஒன்றாக இருந்தாலும் விருத்தங்களால் ஆன காப்பியங்களிடையே மிகுதியாக வருகிறது. -

20. யாப்பிலக்கணம்

தமிழைப்பற்றிச் சொல்லும்போது முத்தமிழ் என்று சொல்வது ஒரு வழக்கு. இயல், இசை, நாடகம் என்று மூன்று பெரும் பிரிவாகப் பிரித்துத் தமிழை ஆராய்ந்தார்கள் புலவர்கள். இலக்கிய இலக்கணங்கள் இயற்றமிழ்; இசைப் பாடல்கள், அவற்றின் இலக்கணங்கள் இசைத் தமி ழென்னும் பிரிவைச் சார்ந்தவை; கூத்தைப் பற்றிய இலக் கணமும் இலக்கியமும் நாடகத் தமிழ்.

இயல்தமிழின் இலக்கணத்தை இக்காலத்தில் ஐந்தாகப் பிரிப்பார்கள்; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவை. பழங்காலத்தில் யாப்பு, அணி என்பவற்றைப் பொருளில் அடக்கிச் சொன்னார்கள். தொல்காப்பியத்தில் யாப்பிலக்கணமாகிய செய்யுளின் இலக்கணம் பொருளதிகாரத்தில் செய்யுளியலில் சொல்லப் பெறுகிறது.

மிகப் பழங்காலத்திலேயே தமிழில் கவிபாடும் புலவர்கள் தோன்றினர்; பல பாடல்களைப் பாடினர். நாளடைவில் தமிழுக்கு இலக்கணம் வகுத்த புலவர்கள் செய்யுளின் இலக்கணத்தையும் வரையறுத்தார்கள். யாப்பு, பாட்டு, தூக்கு, செய்யுள் என்பன கவியைக் குறிக்கும் சொற்கள். செய்யுள் இலக்கணத்தை யாப்பிலக்கணம் என்று வழங்குவது மரபாக இருக்கிறது. யாத்தல் என்பது கட்டுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/106&oldid=655693" இலிருந்து மீள்விக்கப்பட்டது