பக்கம்:கவி பாடலாம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கவி பாடலாம்

தனியே ஒருநூலாக விருத்தத்துக்குரிய இலக்கணத்தை எழுதினார்.

இப்போது இசைப் பாட்டுக்களும் இயற்பாக்களோடு சேர்ந்து கலந்து வழங்குகின்றன. பழங்காலத்தில் இசைப் பாக்களாகிய உருப்படிகளுக்குரிய இலக்கணம் இருந்திருக்க வேண்டும். கட்டளை என்ற கணக்கு இசைப்பாக்களிலும் உண்டென்று திருமுறை கண்ட புராணத்தால் புலனாகின்றது. -

இப்போது இசைப்பாக்களாகிய உருப்படிகளுக்கு வரையறையான இலக்கணம் ஏதும் இல்லை. எதுகை மோனைகளை அமைத்தும், தாளத்தைக் கொண்டு ஓசையை வரையறுத்தும் புலவர்கள் சாகித்தியங்களைப் பாடுகிறார்கள். ஆயினும், அவற்றுக்குரிய இலக்கணத்தை வரையறுத்து நூல் செய்தவர் யாரும் இல்லை. கண்ணி, சிந்து, கந்தருவ மார்க்கச் செய்யுள் என்பன இலக்கியங்களிடையே வருகின்றன. இப்போது கீர்த்தனங்களும் வேறு வகையான இசைப் பாடல்களும் வந்துவிட்டன. எல்லாவற்றுக்கும் ஏற்ற இலக்கணங்களை வரையறுக்க வேண்டியது அவசியம். இயற்பாவுக்கும், இசைப்பாவுக்கும் பொதுவான உறுப்புக்கள் எழுத்து, அசை, சீர், தொடை என்பவை. இவற்றையன்றி, அடி, பாட்டின் உறுப்பு (பல்லவி போன்றவை) ஆகியவைகளைப் பற்றியும் பாட்டின் வகைகளைப் பற்றியும் ஆராய்ந்து பொதுவான இயல்பு களைத் தெரிந்து வகுத்து இலக்கணம் அமைக்க வேண்டும். இயலும் இசையும் தெரிந்த புலவர்கள் இந்தத் துறையில் புகுந்து ஆராய்ந்து முடிவுகட்டினால் ஒரு புதிய யாப்பிலக் கணத்தை இயற்ற முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/113&oldid=655701" இலிருந்து மீள்விக்கப்பட்டது