பக்கம்:கவி பாடலாம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பாடலாம்

(இரண்டாம் பாகம்)

1. எழுத்து, அசை, சீர்

இது வரையில் யாப்பிலக்கணத்தில் உள்ள பழைய முறைப்படி செய்யுளின் இலக்கணத்தை எழுதி வரவில்லை. பெரும்பாலும் இலக்கியங்களில் பயின்று வரும் செய்யுட்களின் இலக்கணங்களையும், அவை சம்பந்தமான வேறு சில இலக்கணங்களையும் பார்த்தோம். இனி, யாப் பிலக்கண நூலில் உள்ளவற்றில் அவசியமானவற்றைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

செய்யுளின் இலக்கணத்தை யாப்பிலக்கணம் என். குறிப்பது வழக்கு. அந்த இலக்கணம் யாப்புக்கு உரிய உறுப்புக்கள் ஆறு என்று சொல்லும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன அவை. செய்யுட்களைப் பா என்றும் பாவின்ம் என்றும் இரு வகையாகப் பிரிப்பார்கள்.

எழுத்தினால் ஆனது அசை அசைகளால் ஆனது off; சீர்களால் ஆனது அடி, அடிகளால் ஆனது பா; சீரும் சீரும் சேரும் இணைப்புக்குத் தளை என்று பெயர். மோனை, எதுகை முதலிய அழகான அமைப்புக்களுக்குத் தொன் என்று பெயர். - -

க. பா.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/114&oldid=655702" இலிருந்து மீள்விக்கப்பட்டது