பக்கம்:கவி பாடலாம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2O கவி பாடலாம்

“தண்சீர் தனதொன்றில் தன்தளை யாம்;தன வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்து, வல் லோர்வகுத்த வெண்சீர்விகற்பம் கலித்தளையாய்விடும்; வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே.”

தன் சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது தன் தளையாம். வஞ்சிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளையாம். வெண்பா உரிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாம். ஆசிரியவுரிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாம்’ என்பது இதன் பொருள்.

3. அடிகள்

அடிகளின் வகையைப் பற்றி முதல் பாகத்தில் பார்த்தோம். இங்கே அவற்றைச் சுருக்கமாக நினைப்பூட்டிக் கொள்ளலாம்.

இரண்டு சீர்கள் அமைந்த அடிக்குக் குறளடி என்று

பெயர். .

மூன்று சீர்களால் வருவது சிந்தடி.

நான்கு சீர்களால் வருவது நேரடி.

ஐந்து சீர்களால் வருவது நெடிலடி.

ஆறு முதலிய சீர்களால் வருவது கழி நெடிலடி. நேரடிக்கு அளவடி என்றும் ஒரு பெயர் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/121&oldid=655710" இலிருந்து மீள்விக்கப்பட்டது