பக்கம்:கவி பாடலாம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனை எதுகைகளின் வகை 125

முதலில் சொன்ன ஐந்து தொடைகளில் ஒவ் வொன்றும் எட்டு வகைப்படும். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மோனையின் வகை எட்டாவன: (1) அடிமோனை, (2) இணைமோனை, (3) பொழிப்பு மோனை, (4) ஒரூஉ மோனை, (5) கூழை மோனை, (6) மேற்கதுவாய் மோனை, (7) கீழ்க்கதுவாய் மோனை, (8) முற்று மோனை. அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் எட்டு அடைகளையும் மற்ற நான்கு தொடைகளோடும் இயைத்து அவைகளிலும் ஒவ்வொன்று எவ்வெட்டு வகையாதலைக் காணலாம்.

ஒரு சீரின் முதல் எழுத்தும் மற்றொரு சீரின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது மோனை. மோனை என்பதற்கு முன்னிடம் என்பது பொருள். மோனையை முதல் தொடை என்று சொல்வார்கள்.

செய்யுளின் அடிதோறும் முதற் சீரில் மோனை அமைவது அடிமோனை. -

“மாவும் புள்ளும் வதிவயிற் படர

மாநீர் விரிந்த பூவும் கூம்ப மாலை தொடுத்த கோதையும் கமழ மாலை வந்த வாடை மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தன்றே.” இந்த நேரிசை ஆசிரியப்பாவில்அடி தோறு மோனை வந்தது. இது அடிமோனை. அடிமோனை அமையும்படி பாட வேண்டும் என்ற வரையறை இல்லை. .

இப்படியே அடி தோறும் எதுகை அமைவது அடி எதுகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/126&oldid=655718" இலிருந்து மீள்விக்கப்பட்டது