பக்கம்:கவி பாடலாம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பில்லாத எதுகை மோனைகள் - 129.

இங்கித மங்கள மெங்குமி லங்குக.

இதில் முற்றெதுகை வந்தது.

இங்கே சொன்ன கீழ்க்கதுவாயை மேற்கதுவாய் என்றும் மேற்கதுவாயைக் கீழ்க்கதுவாய் என்றும் சில ஆசிரியர்கள் மாற்றிச் சொல்வதுண்டு.

5. சிறப்பில்லாத எதுகை மோனைகள்

இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் எதுகையும் முத லெழுத்து ஒன்றிவரும் மோனையும் இன்னபடி இருந்தால் ஒசையின்பம் மிகுதியாகும் என்பதை முதல் பாகத்திலே பார்த்தோம். முன் அத்தியாயத்தில் நாற்சீரடியில் வரும் எதுகை.மோனைகளின் வகையைப் பார்த்தோம்.

சிறப்பில்லாத எதுகை மோனை வகைகள் சில உண்டு. முந்தையோர் செய்யுட்களில் அவை இருந்தால் அவற்றிற்கு வகை இன்னதென்று தெரிந்து கொள்ளவே இவற்றை வகுத்திருக்கிறார்கள். ஆதலின், நாம் புதியதாகப் பாடும் பாட்டில் எதுகை மோனை இந்த அளவில் அமைந்தால் போதும் என்று எண்ணக் கூடாது.

வருக்க எதுகை: ஒரு மெய்யோடு வந்த உயிர்கள் வருக்கமாகும். க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள என்பன ககர வருக்க எழுத்துகள். இவை எதுகை வரும் இடத்தில் வந்தால் வருக்க எதுகை ஆகும்.

நீடுபுகழ்க் காந்தி நினைவை மறந்ததனால் வாடித் தவித்து வருந்துகிறோம்-நாடதனில்

க. பா.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/130&oldid=655723" இலிருந்து மீள்விக்கப்பட்டது