பக்கம்:கவி பாடலாம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கவி பாடலாம்

இதில் மூன்றாம் எழுத்தாகிய ழகரம் ஒன்றும் எதுகை வந்தது.

விட்டிசைத்தலால் வல்லொற்றைப் போல ஒசை அமைந்து எதுகை வந்தால் அது விட்டிசை வல்லொற் றெதுகை யாகும். -

“பற்றிப் பலகாலும் பான்மறி உண்ணாமை

நொஅலையல் நின்ஆட்டை நீ.” இதில் நொ என்ற குறிலுக்குப் பின் வரும் அகரம் விட்டு இசைப்பதனால் வல்லோசை உண்டாகிறது. இது விட்டிசை வல்லொற்றெதுகை. -

தொடர்ந்து பல சீர்களிலும் எதுகை வந்தால் அது வழி யெதுகை ஆகும்.

“மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன்

தொண்டியின்வாய் - கண்டலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு

கனமகர குண்டலங்கெண்டை யிரண்டொடு தொண்டையுங்

கொண்டெர்திங்கள் மண்டலம் வண்டலம் பக்கொண்டல் தாழ

வருகின்றதே.”

இதில் வழியெதுகை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/137&oldid=655730" இலிருந்து மீள்விக்கப்பட்டது