பக்கம்:கவி பாடலாம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற தொடைகளும் வகையும் 139

களைப் போலவே இதுவும் அடிமுரண், இணை முரண், பொழிப்பு முரண் ஒரூஉ முரண், கூழைமுரண், மேற் கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் என எட்டு வகைப்படும்.

அடிதோறும் முதற் சீரில் முரண் வந்தால் அடி முரண் ஆகும்.

‘இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின்

நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னின் அன்ன துண்டா திறைக்கும் சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே.”

இருள்-நிலவு, இரும்பு-பொன், சிறு-பெரு என்பன ஒன்றுக்கொன்று முரணாக இருத்தல் காண்க. அடி தோறும் முதற் சீரில் வந்தமையால் இது அடி முரண் என்று பெயர் பெறும்.

மற்ற வகைகளுக்கு உதாரம்:

‘சீறடிப் பேரெழில் கொடிபோல் ஒல்குபு

சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடம் தாங்கிக் குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கனும் இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும் துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாது என்றும் இன்னணம் ஆகுமதி பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/140&oldid=655734" இலிருந்து மீள்விக்கப்பட்டது