பக்கம்:கவி பாடலாம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓசைகளின் வகை - 147

(1) வெண்சீர் வெண்டளை மட்டும் வரும் வெண் பாவில் அமையும் ஓசை ஏந்திசைப் செப்பல் எனப்படும்.

“வெண்சீர் வெண்டளை யால்வரும் யாப்பை

ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்’ என்பது பழைய இலக்கணச் சூத்திரம்.

‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.” இந்தப் பாட்டில் வெண்சீர் வெண்டளையே வந்த வாறு காண்க. இதற்கு வாய்பாடு அமைத்தால்,

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் காசு. என்று அமையும். ஈற்றுச் சீர் அல்லாதன யாவும் காயச்சீர்களாக அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

(2) இயற்சீர் வெண்டளை மட்டும் அமைந்து வரும் வெண்பாக்களில் அமைவது தூங்கிசைச் செப்ப லோசை, -

‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றுாறிய நீர்.” இதில் ஈற்றுச் சீரைத் தவிர மற்ற எல்லாம் இயற்சீராகிய ஆசிரிய உரிச்சீர்களாகவே வந்தன. ஆதலின், இயற்சீர் வெண்டளையே அமைந்தது.

கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்

கூவிளம் கூவிளம் நாள்

என்று வாய்பாடு அமைத்துப் பார்த்தால் மாவும் விளமுமே வந்தது புலனாகும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/148&oldid=655742" இலிருந்து மீள்விக்கப்பட்டது