பக்கம்:கவி பாடலாம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓசைகளின் வகை 149

இதில் விளமுன் நிரை வரும் நிரையொன் றாசிரியத் தளையே வந்தது. -

(3) நேரொன்றாசிரியத் தளை, நிரையொன் றாசிரியத் தளை, இயற்சீர் வெண்டளை விரவி வருவது ஒழுகிசை அகவலோசை.

முருகன் பாதம் முன்னி ஏத்தி உருகிய அடியவர் உளங்கனிந்தருள்செயின் நலம்வந் தமைந்து நயக்க வலம்பெற் றுயர்வமிம் மகிதல மதனினே. இதில் அவ்வாறு வந்த்மை காண்க கலிப்பாவுக் குரிய துள்ளலோசை ஏந்திசைத் துள்ளலோசை, அகவல் துள்ளலோசை, பிரிந்திசைத் துள்ளலோசை என்று மூன்று வகைப்படும்.

(1) கலித்தளை மட்டும் வந்தால் ஏந்திசைத் துள்ளலோசை. -

“முருகமர்தா மரைமலர்மேல்

முடியிமையோர் புடைவரவே வருசினனார் தருமறைநூல்

வழிபிழையா மனமுடையார் இருவினைபோய் விழமுனியா - வெதிரியகாதியையரியா

நிருமலராயறிவினராய் .

நிலவுவர்சோ தியினிடையே.” இதில் காய்முன் நிரை வந்து யாவும் கலித்தளையாக அமைந்ததைக் கவனிக்க. -

(2) வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தால் அது அகவல்துள்ளலோசையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/150&oldid=655745" இலிருந்து மீள்விக்கப்பட்டது