பக்கம்:கவி பாடலாம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பா இனம் 153

“ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்

விழுமிய பொருளது வெண்செந் துறையே’

என்பது யாப்பருங்கலம்.

“ஆர்க்லி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை’

என்னும் முதுமொழிக் காஞ்சிப் பாட்டில் இவ்விலக் கணங்கள் பொருந்தியிருப்பதால் அது குறள் வெண் செந்துறை யாகும்.

நான்கு சீருக்கு அதிகமாகப் பல சீரால் அமைந்த அடி இரண்டாய் ஈற்றடி குறைந்து வருபவையும், செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருபவையும், குறள் வெண்பாவில் தளை பிறழ்ந்து வருபவையும் குறள் தாழிசை எனப்படும். தாழிசைக் குறள் என்றும் இதைச் சொல்வதுண்டு.

“நண்ணு வார்வினை நைய நாடொறும்

நற்ற வர்க்கர சாய ஞானநற் கண்ணி னானடி யேஅடை வார்கள்

கற்றவரே.”

இந்தக் குறள் தாழிசை நான்கு சீரினும் மிக்க அடிகளை உடையதாய், முதலடி எட்டுச் சீரும் இரண்டாவது அடி ஐந்து சீரும் உடையதாய் வந்தது. -

- வெள்ளை நரைத்தலை மிக்கவ ராயினும்

எள்ளி யுரைப்பீர் என்னே நுங்குணம். இது குறள் வெண்செந்துறைபோல இருப்பினும் விழுமிய பொருளுடையதாக இல்லாமையால் குறள் தாழிசை ஆயிற்று. - -

எத்தனை காலம் பெரியாரோடிருந்தாலும் பித்தருக் குண்டாமோ பெட்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/154&oldid=655749" இலிருந்து மீள்விக்கப்பட்டது